அவுஸ்திரேலியாவுக்கு வெளியில்

படகு வழியாகச் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவை வந்துசேர எத்தனிப்பவர் எவராயினும் திருப்பி அனுப்பப்படுவார் அல்லது அவரது நாட்டுக்குத் திருப்பி அனுபப்படுவார்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வந்துசேர எத்தனிக்கும் நபருக்கு அவுஸ்திரேலியாவின் எல்லைகள் மூடப்படும், அவை தொடர்ந்தும் மூடப்பட்டே இருக்கும்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவை வந்துசேர முயற்சிப்பதால் பண இலாபமடையமுடியாது.

ஆட்கடத்துவோரின் பொய் வார்த்தைகளால் ஏமாறாதீர்கள், அவர்கள் வெறுமனே உங்கள் பணத்தை எடுத்துவிடுவார்கள்.

சட்டவிரோதமாகப் படகுமூலம் அவுஸ்திரேலியாவை வந்துசேர முயற்சிப்பது அர்த்தமற்றது, அத்துடன் மிகவும் ஆபத்தானது.

எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கை

கடலில் உயிர் அழிவைத்தடுக்கவும், ஆட்கடத்துவோரின் திட்டங்களைச் செயலிழக்கச் செய்யவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் கடுமையான எல்லைப்பாதுகாப்பு செயற்பாடுகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது.

எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் (OSB), சட்டவிரோதமாகப் படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்குப் பயணிக்க எத்தனிக்கும் எந்தவொரு நபரும், அவர் புறப்பட்டு வந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்.

சட்டவிரோதமாகப் படகுமூலம் பயணிக்கும் எந்தவொரு நபருக்கும் அவுஸ்திரேலியாவில் செயல்முறை மற்றும் மீள்குடியேற்றம் ஒருபோதும் அவரின் விருப்பத்தேர்வாகாது.

அவுஸ்திரேலியா தனது எல்லைகளைப் பாதுகாக்கவும், ஆட்கடத்தும் குற்றசெயலுக்கு முடிவுகட்டவும் உறுதிபூண்டவண்ணம் உள்ளது.

சட்டவிரொதமாக, படகுவழியாக அவுஸ்திரேலியாவுக்கு வருவதுபற்றி ஆலோசிக்கும் ஆட்கள் ஒருபோதும் அவுஸ்திரேலியாவைத் தமது வசிப்பிடமாக்கிக்கொள்ள முடியாதென அறிவிப்பதற்காக பல்வேறு கடல்கடந்த செய்திபரிமாற்று செயற்பாடுகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் வெளியிடுகிறது.

ஊடக வெளியீடு: ஊடக ெவளி􁾛􁾌

ஆட்கடத்துவோரின் பொய்களை நம்பாதீர்கள்

அவுஸ்திரேலியா தனது கொள்கையைக் காலப்போக்கில் இலகுவாக்கிவிடுமென ஆட்கடத்துவோர் உங்களுக்குச் சொல்வார்கள். அவுஸ்திரேலியா தனது கடுமையான நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவுமில்லை, மாற்றப்போவதுமில்லை.

சட்டவிரோதமாகப் படகுவழியாக அவுஸ்திரேலியாவுக்கு வர முயற்சிக்கும் எந்தவொரு நபரும் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்.

உறவினர், குழந்தைகள், கூடிவராத சிறுவர்கள், படித்தவர்கள் மற்றும் திறமைசாலிகள் அனைவருக்கும் இந்த விதிகள் ஏற்புடையதாகும். விதிவிலக்குகள் கிடையாது.

உங்கள் பணத்தை வீணாக்காதீர்கள். ஆட்கடத்துவோரின் பொய்களை நம்பாதீர்கள்.

இந்தோனேசியாவில் UNHCR உடன் பதிவுசெய்த்தல்

அவுஸ்திரேலிய அரசாங்கம், இந்தோனேசியாவிலிருந்து வரும் அகதிகளை மீளக்குடியமர்த்துவதற்கான அதன் விதிகளை மாற்றியுள்ளது.

நீங்கள் இந்தோனேசியாவுக்குப் பயணித்து 1 யூலை 2014 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ இந்தோனேசியாவில் UNHCR உடன் பதிவை மேற்கொண்டிருந்தால் நீங்கள் அவுஸ்திரேலியாவில் மீள்குடியேற்றத்திற்காகக் கவனிக்கப்படமாட்டீர்கள்.

இந்தோனேசியாவில் 1 யூலை 2014 க்கு முன்னர் UNHCR உடன் பதிவு செய்துகொண்டவர்களுக்கு அவுஸ்திரேலியாவால் வழங்கப்பட்ட மீள்குடியேற்றத்திற்கான இடங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகள் எல்லோருக்கும் பொருந்தும். விதிவிலக்குகள் கிடையாது.

தகவல் இதழ்

அதிக தகவல்கள்

அவுஸ்திரேலியாவின் அகதி மற்றும் மனிதநேயத் திட்டம் குறித்த தகவல்களுக்குப் போய்ப்பார்க்கவும்: Refugee and Humanitarian.

அகதி மற்றும் மனிதநேய விசாக்களுக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் பற்றிய தகவல்களை Refugee and Humanitarian visas க்குப் போய்ப்பார்க்கவும்.

அகதிகள், கடல்கடந்த நடைமுறை, குடியமர்த்தல் ஏற்பாடுகள் மற்றும் அவுஸ்திரேலியாவினுடைய அகதி, மனித நேய திட்டம் குறித்த புதுப்பிக்கப்பட்ட செய்திகளை அறிந்துகொள்ள Department of Immigration and Border Protection's newsroom இனது செய்தி அறைக்குப் போய்ப்பார்க்கவும். 

Australia's borders are stronger than ever

Do not let your loved ones travel illegally by boat to Australia

Do not risk your life travelling to Australia illegally by boat

Australias borders are closed to illegal migration

No change to Australias boat turn back policy