தகவல் தாள்: அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே இருப்பவர்களுக்கான தகவல்

எல்லைகளின் பாதுகாப்புக்கான நடவடிக்கையென்றால் என்ன?

எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கை என்பது கடல்வழியான ஆட்கடத்தலை முறியடிக்கவும், அவுஸ்திரேலியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் ஸ்தாபிக்கப்பட்ட இராணுவ முனைப்புடனான ஒரு நடவடிக்கையாகும்.

ஆட்கடத்தும் குற்றச்செயலை முடிவுக்குக் கொண்டுவரவும், அவுஸ்திரேலியாவைச் சென்றடையப் பாதுகாப்பற்ற படகுகளில் தமது உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதிலிருந்து பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்கவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.

ஆட்கடத்தும் படகு கடைசியாக அவுஸ்திரேலியாவை வந்துசேர்ந்து அனேகமாக மூன்று ஆண்டுகள் ஆகின்றன. அவுஸ்திரேலியாவுக்கு வர முயற்சித்த ஆட்கடத்தும் படகுகள் அனைத்தும் வழிமறிக்கப்பட்டு அவை புறப்பட்டு வந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டன.

அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகள் யாவை?

எவராயினும் ஒருவர் விசா இல்லாமல் அவுஸ்திரேலியாவுக்கு வர எத்தனித்தால், அவர்கள் புறப்பட்டுவந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுவர். அவுஸ்திரேலியாவில் குடியேறுவது விருப்பத்தேர்வாகாது. உங்கள் உறவினர்கள், நண்பர்கள் விசாவில்லாமல் படகில் ஏறினால் அவர்கள் அவுஸ்திரேலியாவைச் சென்றடைய முடியாது.

இந்த விதிகள் எல்லோருக்கும் பொருந்துமா?

ஆம். விசா இல்லாமல், சட்டவிரோதமாக படகுவழியாக அவுஸ்திரேலியாவுக்கு வர எத்தனிக்கும் எவராயினும், அவரவர் புறப்பட்டுவந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுவர். இந்த விதிகள் எல்லோருக்கும் பொருந்தும்: குடும்பங்கள், குழந்தைகள், கூடிவராத சிறுவர்கள், படித்தவர்கள், தொழில்திறன் உடையோரென விதிவிலக்குகள் கிடையாது.

ஆட்கடத்துவோரை நம்பாதீர்கள், அவர்கள் பொய் சொல்கிறார்கள்.

அவுஸ்திரேலியாவை தமது வாழ்விடமாக்கத் தவிக்கும் மக்களுக்குத் தொடர்ந்தும் ஆட்கடத்துவோர் பொய்சொல்லிவருவதை நாம் அறிவோம். உங்கள் உறவினரின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மற்றும் அவர்களின் பணத்தை எடுக்கும் ஆட்கடத்துவோர் குற்றவாளிகளே.

அவுஸ்திரேலியாவுக்குப் போவது சுலபமானதென அல்லது கொள்கைகள் இலகுவாக்கப்பட்டுள்ளனவென ஆட்கடத்துவோர் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் சொல்வார்கள். பொய்களை நம்பவேண்டாமென அவர்களுக்குச் சொல்லுங்கள்! செல்லுபடியான விசா இல்லாமல் அவுஸ்திரேலியாவை உங்கள் வாழ்விடமாக்க முடியாது. அவுஸ்திரேலியா அரசாங்கம் தனது கடுமையான நிலையை மாற்றிவிடவுமில்லை, மாற்றப்போவதுமில்லை.

சட்டங்கள் தமக்குப் பொருந்தாதெனவும், அல்லது சட்டம் விரைவில் மாற்றமடையுமெனவும் ஆட்கடத்துவோர் சொல்லுவார்கள். சட்டங்கள் உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஏற்புடையதாகும், விதிவிலக்குகள் கிடையாது. அவர்களைப் போக விடாதீர்கள்!

சட்டவிரோதமாகப் படகுவழியாக அவுஸ்திரேலியாவுக்கு வர எத்தனிக்கும் எந்தவொரு நபரும் அவுஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார். அவர்கள் தமது பணத்தை விரயம் செய்யமுன்னதாக மீண்டுமொருமுறை யோசிக்குமாறு உங்கள் உறவினருக்கும், நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.

எவ்வாறு எனது அன்புக்குரியவர்கள் அவுஸ்திரேலியாவை எனது வதிவிடமாக்க முடியும்?

அவுஸ்திரேலியாவில் மீள்குடியேற ஆலோசிக்கும் ஆட்கள், அல்லது அவர்களின் மீள்குடியெற்றம் பற்றி அவுஸ்திரேலியாவில் இருக்கக்கூடியக உறவினர், நண்பர்கள் ஆலோசிப்பதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு வருவதற்கு சட்டரீதியான வழியொன்று இருப்பதனை அவர்கள் கட்டாயமாக ஞாபகத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வர முயற்சித்தால், நீங்கள் ஒருபோதும் அவுஸ்திரேலியாவை உங்கள் வாழ்விடமாக்க முடியாது.

அகதி மற்றும் மனிதாபிமான திட்டத்தின் ஒரு பகுதியாக கரை கடந்த மீள்குடியேற்றத் திட்டமொன்று அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் The Department of Immigration and Border Protection இல் உண்டு. உறுதியான வேறெந்தவித தீர்வும் கிடைக்காது, மனிதாபிமான உதவிதேவைப்படும் மக்களின் அவுஸ்திரேலிய மீள்குடியேற்றம் இந்தத் திட்டத்தில் அடங்கும்.

கரைகடந்த மீள்குடியேற்றத்திட்டத்திற்குத் தகுதிபெறாத அதேநேரம் வேலைதேடி அவுஸ்திரேலியாவுக்கு வர விரும்புவர்கள் வேலை விசாவுக்கு விண்ணப்பிக்கவேண்டும்.

சட்டரீதியான குடியேற்ற வழிமுறைகள் குறித்து மேலும் தகவல்களை Department of Immigration and Border Protection :http://www.border.gov.au இணையத்தளத்தில் பெறலாம்.