அவுஸ்திரேலியாவில்

படகு வழியாகச் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவை வந்துசேர எத்தனிப்பவர் எவராயினும் திருப்பி அனுப்பப்படுவார் அல்லது அவரது நாட்டுக்குத் திருப்பி அனுபப்படுவார்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வந்துசேர எத்தனிக்கும் நபருக்கு அவுஸ்திரேலியாவின் எல்லைகள் மூடப்படும், அவை தொடர்ந்தும் மூடப்பட்டே இருக்கும்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவை வந்துசேர முயற்சிப்பதால் பண இலாபமடையமுடியாது.

ஆட்கடத்துவோரின் பொய்வார்த்தைகளால் உங்கள் உறவினரையும், நண்பர்களையும் எமாற்றம் அடையச் செய்யாதீர்கள்.

ஆட்கடத்துவோர் உங்களிடம் பணத்தை எடுத்துவிடுவார்கள், உங்கள் குடும்பத்திற்கு ஆபத்து வரும்.

படகு வழியாகச் சட்டவிரோதமாக இங்கு வர எத்தனிப்பவர்கள் அவுஸ்திரேலியாவில் குடியேறுவது ஒருபோதும் அவர்கள் விருப்பத்தேர்வாகாது.

எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கை

கடல் வழி ஆட்கடத்தலை முறியடிக்கவும்,கடலில் உயிர்கள் மாண்டுபோவதைத் தடுக்கவும் அத்துடன் அவுஸ்திரேலியாவின் எல்லைகளைப் பாதுகாக்கவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் கடுமையான எல்லைப் பாதுகாப்புச் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. சட்டவிரோதமாகப் படகுவழியாக அவுஸ்திரேலியாவைச் சென்றடைவதற்காக நுழைய நாடுகிறவர் எவரும் அவுஸ்திரேலியாவில் வசிக்க முடியாது.

எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ், சட்டவிரோதமாகப் படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்குப் பயணிக்க எத்தனிக்கும் எந்தவொரு நபரும், அவர் புறப்பட்டு வந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்.

படகு வழியாகச் சட்டவிரோதமாகப் பயணிப்பவருக்கு அவுஸ்திரேலியாவில் குடியேறுவது ஒருபோதும் அவரின் விருப்பத்தேர்வாகாது.

உறவினர், குழந்தைகள், கூடிவராத சிறுவர்கள், படித்தவர்கள் மற்றும் திறமைசாலிகள் அனைவருக்கும் இந்த விதிகள் பொருந்தும். விதிவிலக்குகள் இல்லை.

ஊடக வெளியீடு: ஊடக ெவளி􁾛􁾌

உங்கள் பணத்தை விரயம் செய்யாதீர்கள் - ஆட்கடத்துவோர் பொய் சொல்கிறார்கள்

ஆட்கடத்துவோருக்குப் பணம் கொடுத்து உங்கள் உறவினரினதும், நண்பர்களினதும் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தாதீர்கள். உங்கள் உறவினர்களும், நண்பர்களும் விசா இல்லாமல் அவுஸ்திரேலியாவுக்குப் படகுவழியாகப் பயணம் செய்தால் அவர்கள் அவுஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள்.

அவர்கள் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும்கூட, அவர்கள் அவுஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள்.

ஆட்கடத்துவோரைத் தடுக்கவும், மேலும் கடலில் உயிர் அழிவைத் தடுக்கவும் இத்தகைய செயற்பாடுகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.

இந்தோனேசியாவில் UNHCR உடன் பதிவுசெய்தல்

இந்தோனேசியாவிலிருந்து வரும் அகதிகளை மீளக்குடியமர்த்துவதற்கான அதன் விதிகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் மாற்றியுள்ளது.

நீங்கள் இந்தோனேசியாவுக்குப் பயணித்து 1 யூலை 2014 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ இந்தோனேசியாவில் UNHCR உடன் பதிவை மேற்கொண்டிருந்தால் நீங்கள் அவுஸ்திரேலியாவில் மீள்குடியேற்றத்திற்கு கவனிக்கப்படமாட்டீர்கள்.

இந்தோனேசியாவில் 1 யூலை 2014 க்கு முன்னர் UNHCR உடன் பதிவு செய்துகொண்டவர்களுக்கு அவுஸ்திரேலியாவால் வழங்கப்பட்ட மீள்குடியேற்றத்திற்கான இடங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகள் எல்லோருக்கும் ஏற்புடையதாகும். விதிவிலக்குகள் கிடையாது.

தகவல் இதழ்

Australia's borders are stronger than ever

Do not let your loved ones travel illegally by boat to Australia

Do not risk your life travelling to Australia illegally by boat

Australias borders are closed to illegal migration

No change to Australias boat turn back policy